வினா தாள் வானம்

எனக்கு பிடித்தனவற்றையெல்லாம்
பட்டியலிடுகையில்
நிச்சயமாய்
"வானம் பார்த்த"லும் ஓரிடம் பிடித்துக் கொள்ளும்...
இரவு நேரங்களில் எனக்கான வானம்
ஆயிரம் கேள்விகளுடனான
ஒரு வினாத்தாளாகும்...
ஒவ்வொரு கேள்வியும்
ஒவ்வொரு நட்சத்திரம்...
கிழக்கு மூலையில்
ஒரு விண்மீன் மட்டும்
"எந்த கேள்விக்கும் உனக்கு விடை தெரியாது" என பரிகசித்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கும்...

எழுதியவர் : -சிவா பிரம்மநாயகம். (8-Jun-12, 12:20 am)
பார்வை : 236

மேலே