மனிதத்தோடு வாழ்வோம் மனிதனாவோம்..
உடல்படும் வேதனை உயிர்துடிக்கும் சோதனை
தவித்து தல்லாடும் மக்களைவிட்டு
சுயம் விற்று சேவை செய்யும் கூட்டத்தின்
உணர்ச்சிப் போராட்டம் இங்கே
ஊர்வலம் பொதுக்கூட்டம் எனத்திரியும்
வேடதாரிகளின் கூட்டம் அங்கே
மக்களின் உயிரும் வேதனையும்
இவர்களுக்கு முக்கியமற்றுப் போயின
ஓட்டும் வெற்றியும்தான் மிகமுக்கியமாகிப் போயின
நல்ல மக்களே மனது வைப்பீர்
சேவை புரியும் பெருமக்களே மனது வைப்பீர்
உங்கள் போராட்டம் கைவிடுவீர்
போது நலம் பார்ப்பீர் உயிர்களைக் காப்பீர்
நீங்கள் போராடவே வேண்டாம்….
எங்கள் அன்பும் உயிரின் ஆசியும்
உங்களை என்றும் நல்முறையில் வாழ்விக்கும்