சமூக அவலங்கள்( குறைகூறும் குயில்களே...! - கவிதை திருவிழா)

குறை சொல்லி குறை சொல்லி,
உள்ளுக்குள்ளே குமுறி கொண்டு,
இமயம் முதல் குமரி வரை,
மாற்றானை குறை சுட்டி,
முன்னோக்கும் நம் கைகள்,

வசதியாய் மறந்ததென்ன,
நாம் செயும் தவறுகளை,
குற்றம் செய்யும் கள்வர்களை,
தேர்ந்தெடுத்த குற்றவாளி நாம் தானே,
மனிதர்களாய் வாழ்ந்த நாமும்,
நுகர்வோராய் மாறியதேன்,

கையூட்டு பெரும் கள்வனுக்கு,
கைநீட்டி பொருள் தந்து,
கைகட்டி வாய்பொத்தி,
சலாம் போடும்,
சகமனிதன் நாமன்றோ,

சாலையிலே அடிபட்டு,
குற்றுயிராய் கிடப்பவனை,
சுற்றி நின்று பார்த்தவிட்டு,
பாவம் என்று சொல்லிவிட்டு,
சென்றுவிடும் வெட்டிப்பயல் நாமன்றோ,

வழக்குகளை வழக்கமாக்கி கொண்டவனை,
குற்றவாளி எனத்தெரிந்தும்,
நம் ஓட்டை விற்றுவிட்ட கையேந்தி நாமன்றோ,

ஆயிரம் நெறிமுறைகள்,
சாலையில் இருந்தாலும்,
தனக்கென்று வந்துவிட்டால்,
நெறிமுறையை உடைத்துவிட்டு பாய்ந்து செல்லும்,
மதிகெட்ட மனிதர்கள் நாமன்றோ,

ஒருபோதும் உணரவில்லை,
ஒருபோதும் பேசவில்லை,
நம் குற்றம் நாம் அறிவதில்லை,
அறிந்தும் அதை திருத்தவில்லை,

கண்டிப்போம் - கையூட்டு கேட்டால்,
எட்டிஉதைப்போம் - வாக்குக்கு பணம் கொடுத்தால்,
உதவிடுவோம் - சாலையில் குற்றுயிராய் கிடப்பவனுக்கு,
மதித்திடுவோம் - சாலை நெறிமுறையை,

அனைவருமே இந்நாட்டின் மக்கள் அன்றோ,
வாழ்ந்திடுவோம் நற்குடிமகனாய்,
வளர்த்திடுவோம் நம் நாட்டை வல்லரசாய்,

எழுதியவர் : அருண் பா (9-Jun-12, 1:13 pm)
பார்வை : 332

மேலே