கவிதை
நிலம் நோக நடவாள் -அவள்
மஞ்சள் முகத்தால் மனம்
கொய்யும் நிறத்தாள்!
கருவண்டுக் கண்ணால் -அவள்
கதை பல சொல்வாள்!
நெறி வழி நின்றவள் நெக்குருகச்
செய்வாள்!
கொடிதனில் பூக்கின்ற பூக்கள்
கொய்தே - கருங்கமல் கார்மேக
கூந்தல் தனில்
நெடுமுடி தரித்த மகுடம் போலே
கன்னிநிலா பூக்கள் சூட!
கொடியிடை நோக குஞ்சமும்
அசைய -தாவணி கட்டி
அடிமுதல் முடிவரை அவனன்றி
யாருக்கும் காணச்செய்யாள்!
இடையினில் மேகலை,
மோகனப்புன்னகை
நடையினில் மயிலவள்,
காவிரிப்புது வெள்ளம்
அவள் அன்பே!
நிற்க
இது வரலாறு! இனிமேல் தகறாரு!
அவள்
முகம் முட்டும் ரசாயனம் பூசி
காற்றினை கசக்கும் வாசனை பூசி
கோதை அவள் உலாவுகிறாள்!
வயதினை மறைக்கப் பாடாய்ப்பட்டே
மாற்று உருவத்தில் மருளுகிறாள்!
இரவின் உடையை பகலில் உடுத்தி
காண்பவர்க்கு இன்பச்சுற்றுலா
காட்டுகிறாள்!
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!
கொஞ்சம் பாரடி
பாவிகள் கண்ணே!
பார்ப்பவர் மீதே பிழை என்றாலும்
பாசத்தில் தகப்பன் வாங்கித்தந்தாலும்
பெண்ணவள் மேனி - புதயலடி
அதை போற்றி மறைத்தே
உடுத்திடடி!