யுகம் யுகமாய்
யுக யுகமாய் மாற்றங்கள்
உணர்ந்தோமே மதியாலே...!
ஒளி கண்டு பயந்து
ஒளிதனைப் படைத்து
ஒலி கண்டு வியந்து
மொழிதனைப் படைத்து.....
எத்தனை முயற்சி ?
எத்தனை மகிழ்ச்சி ?
அத்தனை சாதனையும்
மனிதனின்.....
மகத்துவ நிகழ்ச்சி.......!
உயர்ந்தோம்......!
வளர்ந்தோம்.....!
உவகையில் மிதந்தோம்....!
ஆஹா மனுசா.......!
அசகாய சூரா...........!
அறிவியலை வைத்தே நீ
அடக்க முயல்கிறாய் இயற்க்கை !
அற்புதமடா உன் திறமை......!
ஆனந்திக்கிறேன் உனைப் பார்த்து...!
அட.......!
அங்கே என்ன டீக் கடையில்
இரண்டு தேநீர்க் கப்புகள்......?
மேல் சாதிக்காரனுக்கு ஒன்று.....
கீழ் சாதிக்காரனுக்கு ஒன்றா ?
அது சரி.....!
நாராயணனை படைத்ததும்
நீதான்
நாத்திகனாய் போனதும்
நீதான்
யுக யுகமாய் பல மாற்றங்கள்
உன்னால் ஏற்படுகின்றது.......!
சாதியையும் சாமியையும் இனி
நிறைய நீ வைக்காதே.......!
ஒரே சாதி ஒரே சாமி
அதே " மனிதன் " என
அமைத்துக் கொள்ளடா........!
ஆதாம் ஏவாள் செய்த காதல்
யுகம் யுகமாய் தொடர்வது போல்
அடுத்து நீ செய்யப் போகும்
ஜாதி ஒழிப்பும்
முடிவில் முளைக்கும்
மனித ஜாதியும் - இனி
யுகம் யுகமாய் தொடருமடா....
நீயும் நானும் எதிர்கால
தாத்தா பாட்டி.......!
எல்லோரும் நமது
பேரன் பேத்தி......!
செட்டியார் கோனார்
பிள்ளைவாள் ஐயர்
என விலங்குகளுக்கும்
பெயர் வைக்காமல்
இன்புற்றே நாம் வாழ்ந்திருப்போம்.....!
யுகம் யுகமாய்
யுகம் யுகமாய்
யுகம் யுகமாய்