(சே.குவேரா ஒரு மாமனிதர் ) 555

சே.குவேரா.....

வாழ்க்கை போர்களமா...?

போர்க்களம் வாழ்க்கையா...?

வாழ்க்கை வாழ்ந்துவிட ஆசை
எல்லோருக்கும்...

வாழும் வாழ்க்கை
போராட்டங்கலோடா...?

இல்லை...

நந்தவன பூகளோடா..?

வாழும் வாழ்க்கை போராட்டமா
ஓடி முடியும் நீரோட்டமா...?

வாழ்ந்த வாழ்க்கை போராட்டங்களோடு
வாழ்ந்த மாவீரன்...

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்
சப்தங்களோடு...

வாழ்ந்த மாவீரன் அல்ல...அவர்...

வாழ்ந்துகொண்டு இருக்கும் மாவீரர்
சே.குவேரா...

கிழக்கே உதிக்கும் தினம் சூரியன்...

உலகிற்கு ஒரு விளக்காய்
திரு விளக்க சூரியன்...

மேற்கே உதித்த போராட்ட சூரியன்
சே.குவேரா...

நீர்க்குடம் உடைந்து கடலாய் மாற
மாவீரன் பிறந்தான்...

மேற்கே உதித்த சூரியனாய்
அர்ஜென்டினாவில் உதித்த
போராட்ட சூரியன்...

கியுபா என்னும் அடிமை
நாடாக இருக்க...

கடலை தேடி செல்லும்
நதியைப்போல...

போராட்ட புரட்சி குழுவில்
இணைந்த மாவீரன்...

லட்சியமா வாழ்க்கையா...

வென்றது போராட்டம்
விடுதலை ஆனது கியூபா...

உலகின் அடிமை நாடுகளுக்கு
விடுதலை புரட்சி வேட்கை
அமைத்த மாவீரன்...

எங்கள் சே.குவேரா...

வாழ்ந்தபோதும் மண்ணைவிட்டு
பிரிந்த போதும் போராட்ட
வேட்கை இன்னும் மண்ணில்...

வாழும் மாவீரனே...

பதவிகள் பல வந்தும் உதறிய
போராட்டகாரன்...

நாற்காலில் அமர்ந்து அறையில்
கோப்புகளை பார்க்க மறுத்த...

உணர்ச்சியின் உச்சம் சே.குவேரா...

ஓடும் குருதி நிற்கும் வரை
ஓயாமல் போராட்டங்கள்...

தனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை...

பொதுநல வாழ்க்கை...

போராட்டங்கள் மட்டும்...

ஒவ்வொரு போராட்ட மனிதனுக்குள்
இருக்கும் மாவீரனே...

நீ வாழ்ந்து கொண்டு இருப்பாய்
உலகம் அழியும்வரை...

தனிமனிதர் அல்ல குவேரா...

மாபெரும் நிலபரப்பின்
மாபெரும் மனசாட்சி குவேரா...

வணங்குகிறோம் நாங்கள் உங்களை.....

எழுதியவர் : முதல்பூ பெ. மணி (9-Jun-12, 9:49 pm)
பார்வை : 224

மேலே