என் தங்கை

ஒரே சொர்கத்தில் பிறந்து ,
வளர்ந்து ,
ஒருவரை ஒருவர் காயப்படுத்தி ,
அழுகையை ரசித்து ,
முத்தங்களை பொழிந்து ,
அன்பை பரிமாறி ,
அக்கறையாய் உருமாறி ,
சொந்தங்கள் பல கடந்து வந்தும் ,
அலையும் கரையுமாய் ஒன்றாகவே வளர்ந்து வந்த நம்மில் இன்று நான் சொர்க்கம் என்னும் மரத்தில் கிளை என்னும் சொந்தமாய் முளைத்திருக்க , அதில் கனியாய் மலர்ந்த நீயோ இன்று விதையாய் மாறி இன்னொரு பந்தத்தை அமைத்துக்கொண்டாய் மருமகள் என்னும் பெயரோடு ............இன்னும் வேறாய் இணைந்திருக்கிறது நம் அண்ணன் தங்கை உறவு
.....

எழுதியவர் : மதன் (10-Jun-12, 11:29 am)
பார்வை : 351

மேலே