வாழ்க்கையை வாழ்வதாய்
சாலையோரம் கரித்துண்டால்
ஓவியம் தீட்டுபவனையும்
கதவைத் தட்டும் காவலாளியையும்
பால் காரனையும் செய்தித்தாள் விற்பவனையும்
நாம் உறவுமுறையிலோ நட்பினாலோ கூட
நாம் அறிய நேரமிருக்காது !
நாம் சக மனிதரோடு விளையாடவும் கூட
மனம் ஈடு பாடு கொள்ளாது!
நண்பர்களாகக் கூடவும் நம்மால்
சிலரை ஏற்றுக் கொள்ளவும் தயக்கம்.
நெருங்கிய உறவினர்களுக்குக் கூட
நம்மால் உதவி செய்வது முகம்
சுழித்தே நடை பெறுகிறது.
ஆனால்..
கணிப் பொறியுடன் விளையாடுகிறோம்
நண்பர்கள் சேகரிக்கிறோம்.
இ.மெயில் ,face book ,t w i t ,பாஸ்வர்ட்
எல்லாம் வைத்திருப்போம்.
நம் எண்ணங்கள் எல்லாம்
பதிந்து விடுகிறது
கணினியின் மீதே !
இம் முறையில் நாம் வாழ்க்கையை வாழ்வது என்று கூறுவது முறையா?நல் வழிப் படுத்துதா?
கணினி நம்மை வாழ்வைக்கிறதா? என
நாம் நினைத்ததை வாழ்வதாய் !
நினைத்து அடிமையாகிக்
கொண்டிருக்கிறோம்
இன்று வரை !
மனிதம் மதிக்கப் படுகிறதா என்றும்
நம்முள் கேள்வியே பிறக்கிறது.!
கணினியுடன் வாழ்க்கை
நாம் வாழ்வதாய் நினைத்து
அடிமை நிலையில் நாம்
கணினியை விரும்புகிறோம்
இன்று வரையும் ...!