நிலமகள் துதி!!!
நிலமகள் மடந்தை - நீ
இயற்கையின் குழந்தை!
பசுமை
குடையினை விரித்தே
உலகை
குளிர்வித்த குடந்தை!
இடக்கை கொடுத்திடல் -அறியா
வலக்கை
இருகை குவித்தே கொடுப்பது
இயற்கை!
கருநிறக்கன்னி அவள்
கரிசல் வளர் பொன்னி!
செந்நிறமேனியவள் செங்காந்தள்
தோழி!
பச்சை பட்டாடை உடுத்தியே
பாரெங்கும் பசி தீர்ப்பாள்!
பல நிறப்பூக்கள் பூத்திடவே
மாக்கோலம், பூக்கோலம் தரித்திடுவாள்!
நெல்லுக்கும் புல்லுக்கும்
பேதம் பாராள்!
கல்லுக்கும், காற்றுக்கும்
பேத்தி ஆனாள்!
அன்னை மடிதேடும் ஆசைகுழந்தையாம்
மழையை அள்ளி அணைப்பாள்!
அன்புப் பிடி கொடுத்து
வேருக்கு விதையாய் சிறப்பாள்!
பறவைக்கு வீடு
அவள் பாசத்தின் கூடு!
பசித்தவன் பாடு - தீர
நீ
இயற்கையை பாடு!