கடவுள் என்னிடம் பேசினார்

கடவுள் என்னிடம் பேசினார்
என் கவிதைகளை படித்து
கருத்திட வந்தேன் என்றார்

அதற்குள் வந்தது
அவரது கைபேசியில்
ஆயிரம் கோடி அழைப்புகள்

காப்பாற்று கடவுளே! காப்பாற்று!
என்று கேட்ட குரல்களோ சில

அதைக்கொடு இதைக்கொடு
அள்ளிக்கொடு பணம்
என்று கேட்ட குரல்களோ பல

எல்லோரையும் வாழ வை
என்று கேட்டது ஒரு குரல்
எல்லோரும் என்றது
அவர் குடும்பத்திலுள்ள
எல்லோரையும் என்பது
அப்புறம்தான் தெரிந்தது
அந்த கடவுளுக்கே!

இன்னும் பலகோடி வந்தன
இமெயிலும் எஸ்.எம்.எஸ்.களும்

அதற்குள் வந்தது அவசர அழைப்பு
அது ஆதினமோ?அல்லது யாரோ?
அது தெரியாது எனக்கு

எல்லோருக்கும் நல்லது செய்யவே
நேரமில்லை எனக்கு.........
கவிதைகளா? கிறுக்கல்களா?
அப்புறம் சொல்கிறேன் கருத்து
அவசர வேலை இருக்கென்று
என் மடிக்கணணியுடன்
மறைந்தே போனார் கடவுள்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (10-Jun-12, 8:57 pm)
பார்வை : 194

மேலே