வளர்த்தவனை வணங்கி நிற்கும்
சிவந்தால் உதயம்
பொழிந்தால் வானம்
உழவன் குனிந்து
உழைத்தால் பசுமை
குனிந்து உழைத்து
நெஞ்சு உயர்த்தி
நிற்பவன் உழவன்
குனிந்து குனிந்து
உழைத்து உரமேற்றி
நிற்பான் பயிர் தொழிலாளன்
உயர்ந்து உயர்ந்து
வளர்ந்து நெல்மணிகளை
சுமந்து வளர்த்தவனை
வணங்கி நிற்கும் நெற்பயிர்
வளர்த்தவனை வணங்கி நிற்கும்
ஒரே பசுமைப் பயிர் நெற்பயிரே
நாமும் அவனை வணங்கிடுவோம்
---கவின் சாரலன்