சமூக அவலம்(கவிதை திருவிழா போட்டி)

கை நிறைய காசு
மடி நிறைய ஆண்கள்
சிவப்பு விளக்கு பகுதியில்...
சமூக அவலம்...

தான் படிக்கும் காலத்தை விட
தன் மாணவருக்கு
படித்து படித்து பாடம்
சொல்லித் தரும்
ஆசிரியை கொலை......
சமூக அவலம்...

மகளின் காதல் பொறுக்காமல்
பெற்றோரே வெட்டி கொலை செய்யும்
சமூக அவலம்......

நட்பிற்கும் காதலுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
ஒரு நொடியில் சிந்தை தடுமாறி
இளம் பெண்
ஏமாந்து தனக்குள் தொலைந்து போகும்
சமூக அவலம்.....

கண் கண்ட கணவனாக
நினைத்து பூஜிப்பவனே
மனைவியை மற்றவனுக்கு விற்கும் அவலம்...

தேர்வு எழுதி விட்டு
ஏழை குடிமகன் முடிவிற்கு
காத்திருக்கும் வேளையில்
வசதி படைத்தவன்
வேலையை வீட்டில் இருந்தே
பணம் கொடுத்து வாங்கும்
சமூக அவலம்......

தன் நாட்டு எல்லையில்
தனக்கு மீன் பிடிக்க சுதந்திரம்
இல்லாத மீனவனின்
வாழ்வாதாரம் சமூக அவலம்.....

ஆண்டு முழுவதும்
ஏதாவது அரசியல் தேர்தலுக்கு
தன் வரி பணத்தை
அள்ளி கொடுத்து விட்டு
ஏமாந்து நிற்கும்
பொது மக்கள் சமூக அவலம்...........
நித்தம் நித்தம் வாழ்கை அவலம்.......

எழுதியவர் : சாந்தி (10-Jun-12, 10:44 pm)
பார்வை : 403

மேலே