இதியாவின் முதுகெலும்பு விவசாயம்

உணவளித்தாயே உன்னதனே
உணவளித்தாயே உன்னதனே -நாளும்
உயிர் காக்கிராயே நல்லவனே
தலைவா தலைவா நீ
தனியாய் தணிவாய்
கனிந்து புரியும் - நாங்கள்
வணங்கி மகிழும்
நிலத்தை களையும்
நிலைத்த கலையும் கொண்டவனே
உணவளித்தாயே உன்னதனே
ஞானம் இல்லா ஞாலத்தில்
விஞ்ஞானம் வந்தாலென்ன
மெய்ஞ்ஞானத்தின் சொந்தக்காரன் நீ...
உன் ஞானம் தான்
அந்தம் முதல் ஆதி வரை தீ ......
உணவளித்தாயே உன்னதனே
நீ வழங்கிய பயிர் - அதில் தான்
வாழுது மானிடர் உயிர் ...(நன்றி மறந்தவர்களை விட்டுவிடு)...
கடவுள் எங்களை படைக்க - நாங்களோ
கடவுளுக்கு பொங்கலை படைக்க
ஆணிவேரே நீதான்
ஞானியும் நீதான் - என்ன சொல்ல
கடவுளுக்கே உணவளித்தாயே உன்னதனே...
உணவளித்தாயே உன்னதனே
தாய்ப்பாலின் அடுத்தபடி நீ - அது சுரக்க
என் தாய்க்கு உணவிட்டவனும் நீ..
உணவளித்தாயே உன்னதனே
கடுகளவும் கலங்கமில்லா கல்வி
கல்வியும் மேலான கவி நீ ....
உணவளித்தாயே உன்னதனே
கடல் கடந்து உன் உருவாக்கம்
கர்ப்பிணியின் கருவாக்கம் - தொடங்கி
கல்லறை வாய்க்கரிசி வரையிலும்
செல்லுதுன் பயிராக்கம்...
உணவளித்தாயே உன்னதனே
வாய்க்கால் பாசனமோ ஆற்று பாசனமோ
வாய்க்கு உணவும் வாழ்க்கைக்குஅர்த்தமும்
வரக் காரணம் நீ ..பெறக் காரணம் நீ
உறவுக்கும் உழைப்புக்கும் முன்
உதாரணம் நீ ...நீயே ... நீயேதான் ..
உணவளித்தாயே உன்னதனே...
நாளும் திறனாய்
பயிரின் உரனாய்
வெயிலில் அலையும் - நீ
களையும் கலையும்
கூட்டுமே நெற்பயிருக்கு ஊட்டம்
காட்டுமே என்உயிருக்கும் வாழ்க்கைக்கும் வாட்டம்
வணங்குகிறேன் தலைவனே
உணவளித்தாயே உன்னதனே...
உணவளித்தாயே உன்னதனே...
வேர்வை சிந்தும்
பார்வை மங்கும் - போதிலும்
வயிறு ஏங்கும் நிலை தந்திராத
தலைவா தலைவா
வணங்குகிறேன் உன்னை
உணவளித்தாயே உன்னதனே...