சமூக அவலங்கள் 2 (கவிதை திருவிழா படைப்பு)

மனிதநேயம் செத்துபோச்சு ,
மிருகங்கள் மட்டும்தான் வாழுது ,
பொதுநலம் போற்ற ஆள் இல்லை ,
சுயநலம் கொண்ட உலகிலே !

நான்கு கால் மிருகத்திடமிருந்து
தப்பித்து வாழ்கிறேன் ,
இரண்டு கால் மிருகத்தை
கண்டு கண்டு அஞ்சுகிறேன் !

கொண்டுவந்தது ஒன்றுமில்லை
இருப்பதெல்லாம் என்னுடையது என்கிறான் ,
மனமுள்ளவன் கையில் பணம் இல்லை ,
பணம் உள்ளவன் கையில் மனம் இல்லை !

தானே கடவுள் என்கிறான் ,
கண்டதை எல்லாம் அழித்து விட்டான் ,
நிலம் , நீர் , ஆறு , மரம்
எல்லாவற்றையும் அபகரித்துவிட்டன ,
புனிதம் பெற்ற பூமியில்
பூக்களுக்கும் இடமில்லாமல்
அவனவன் வீடு மொட்டைமாடிகளில் !

மாட்டுவண்டி காலத்தில் மழை மும்மாரி பெஞ்சுது காரு , பஸ்சு வந்தபோது எல்லாம் காஞ்சு போச்சுது ,
வரம் வேண்டி தவம் கிடந்த காலம் போய் ,
மழை வேண்டி தவம் கிடக்கிறோம் !

கூட்டு குடும்பமாய் வாழ்ந்ததில்
எத்தனை கொண்டாட்டம் , சந்தோசம் ,
நாகரீக வாழ்க்கையில் நரக வேதனைகள்
பெற்றவர்களுக்கு மட்டும் ,
கோவில் கட்டவேண்டிய பெற்ற தெய்வங்களுக்கு ,
அநாதை ஆசிரமத்தில் அட்வான்ஸ் புக்கிங் !

தள்ளாடி கொண்டிருக்கும்
இந்திய தூண்கள் ,
பள்ளிவாசல்களை மறந்துவிட்டு ,
பார்வசல்களில் நிரந்த அடைக்கலம் !

வேலைக்கு ஆள் தேவை ,
எத்தனையோ விளம்பர பலகைகள் ,
தேவைக்கு ஆல் இல்லாமல் அல்லாடும்
நிறுவனகள் இருந்தும் ,
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ,
வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் கூட்டம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (10-Jun-12, 11:00 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 184

மேலே