ஒப்பில்லா உழவு .3 (கவிதை திருவிழா)
ஒப்பில்லா உழவுக்கு
கொடுக்கும் கூலி தெரியுமா?
உழவுக்கு கூலி -
ஒன்று அல்ல மூன்று
உழவுக்கு கூலி கொடுத்து
இருவாரம் கழித்து - மேலும்
இரு உழவுக்கு கூலி கொடுத்து
மரம் அடிக்க கூலி கொடுத்து
பாத்தி கட்ட கூலி கொடுத்து
நாற்றுபாவ கூலி கொடுத்து
அடிஉரம்போட கூலி கொடுத்து
நடுவைக்கு கூலி கொடுத்து
ஓரிருவருக்கு அல்ல -( குறைந்தபட்சம்)
இருபது நபருக்கு கூலி கொடுத்து
களைஎடுக்க கூலி கொடுத்து
ஒருகளை அல்ல , இருமுறை கொடுத்து
ஓரிருவருக்கு அல்ல - (குறைந்தபட்சம்)
இருபது நபருக்கு கூலி கொடுத்து
மறுபடியும் கலைகொல்லி ,
உயிரை கொள்ளும் உரம்
விதவிதமாக போட கூலிகொடுத்து
இரவு பகலாக தண்ணீர் இல்லாமல்
அதை அடுத்தவன் கிணற்றில் வாங்கி
அதற்க்கு கூலி கொடுத்து
அறுப்புக்கு கூலி கொடுத்து
நெல்மணிகளை சாக்கில்அடைக்கவும்
அதை ஏற்றிஇறக்கவும் கூலி கொடுத்து
வீடு கொண்டு சேர்க்கும் முன்
அவன் இறக்கும் நிலைக்கு வந்துவிடுவான்
சொல்லத்தான் வேண்டுமா
ஒப்பில்லா உழவைபற்றி !
இதற்க்கு இடையில்
நெல்லிற்கு இலைசுருட்டு நோய்
நெல்லிற்கு இலைபழுப்பு நோய்
நெல்லிற்கு கொள்ளை நோய்
நெல்லிற்கு நெல்வண்டு நோய்
நெல்லிற்கு குலை நோய்
நெல்லிற்கு இளைபுள்ளி நோய் - என
இதுபோன்ற நோய்களை
ஒரு தலை பிரசவம்
காப்பதை போன்று பாதுகாத்து
காத்திருந்து , காத்திருந்து
கால்கோட்டை, அரைகோட்டை.
இல்லை முளுமேனிதான் வந்திடுமா ?
நெல்லாவது வருமா , வராது என்று
வடிவேலு போல புலம்பிதவித்து
வாடி வதங்கி , ஒடுங்கி
ஓரிடத்தில் அமர்ந்திருக்கும்
நிலையிலிருக்கும் உழவனின்
ஒப்பில்லா உழவை பற்றி
அப்பப்பா சொலத்தான் வேண்டுமோ ?
இறுதியில் நெல்மனிக்கு விலைபேசி
தன கண்மணிகளை வளர்க்க படும்
பாட்டை , அப்பப்பா சொல்லத்தான் வேண்டுமா
ஒப்பில்லா உழவைப்பற்றி !
என்றும் அன்புடன் \"நட்புக்காக\"
தொடர்ந்து வருகிறேன் \"ஒப்பில்லா உழவுக்காக \"