நிலா

படர்ந்துக் கிடக்கும் இரவின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டாய் வெண்ணிற திலகம்;

இலைகள் அசைவில் பிறக்கும் காற்றைப்போல்
இரவின் பிறப்பால் பிறக்கும் பிறையே;

இமைகள் மூடி உறங்கும் நேரத்தில்
இதயம் கொள்ளை கொள்ளும் கள்வன் வேலையோ;

நாளின் பாதிதான் உன் உபயம் ஆனாலும்
நிறைவேராத உள்ளத்திலும் முழுமையாய் நிறைந்தாய்;

நிறங்கள் நிறைந்த வானவில்லை காட்டிலும்
வளர்ந்து தேயும் நீயென்றும் அழகே;

மின்னி மலரும் வின்மீன்கள் மத்தியில்
கறையில்லா காரணத்தால் வீரியமாய் நின்றாய்;

புவி குளிரச்செய்யும் கவின் மதியே
வான் இறங்கிவாரா இயற்கை பரிசே;

தரை இறங்கிவந்து முத்தம் ஏற்பாயா
மனம் மகிழச்செய்யும் நிம்மதி நிலவே!

எழுதியவர் : Baveethra (12-Jun-12, 9:34 pm)
சேர்த்தது : Baveethra
Tanglish : nila
பார்வை : 319

மேலே