புறா விடு தூது!

ஒருக்காலமும் இருந்தது
ஓலை வழிச்செய்திதனை
ஒற்றன் அவன் எடுத்துக்கொண்டு
ஓரிரு மாதம் காலம் தாழ்த்தி,
உரியவரிடம் கொண்டுச்சேர்க்க !

அடுத்தக்காலம் என்னவெனில்
தூது அனுப்பி தெரிவித்தல் - புறா
விடு தூது அதுவும், ஓரிரு
வாரம் பறந்தோடியே பெரு-
நவரை சேர்ந்திடுமே !

மூன்றாம் காலம் காகிதம்-
மூலம், தபால்த்தலை ஒட்டியே
சேர்த்திட பெட்டியில், ஓரிரு
நாளில் விலாச குறிப்பில் !

மேகமாய் ஓடும் காலமோ இன்று !
மின்னஞ்சல், குறுஞ்ச்செய்தி, செழுஞ்செய்தி
இணையில்லா விரைவில் இணையம்
இதுப்போதும், எப்போதும், எவரோடும்
இருந்திட தொடர்பினிலே முப்பொழுதும் !

காலம் மாற்றம் கண்ட நிமிடம்
உள்ளன்கையில் வந்தது உலகம்.

எழுதியவர் : எழுத்தோலை கோ.இராம்குமார் (13-Jun-12, 3:23 pm)
சேர்த்தது : எழுத்தோலை
பார்வை : 683

மேலே