கவனமா இருங்க....
சிக்கியப் பிறகு தான் தெரிந்தது
சிக்கியது காதலில் அல்ல
சிலந்தி வலையில் என்று....
விழுந்த பிறகு தான் தெரிந்தது
விழுந்தது காதலில் அல்ல
பாதாளத்தில் என்று...
படித்தப் பிறகு தான் தெரிந்தது
படித்தது
கவிதைகள் அல்ல
கண்ணீர் சரித்திரம் என்று....
எல்லாம் பட்டு கடைசியில்
வந்த பிறகு தான் தெரிந்தது
வந்தது சொர்க்கம் அல்ல
சுடுகாடு என்று....