உலக இரத்ததான தின கவிதை.....
இரத்தத்தின் இரத்தமென்று
நாம் இணைந்து வாழ்ந்திடலாம் !
இரத்த தானம் செய்து நாளும்
இரத்தபந்தம் ஆகிடலாம் .
எந்த சாதி எந்த மதம்
எந்த இனமானாலும்
ஓடும் இரத்தம் ஒருநிறமே
உண்மை கண்டு வாழ்ந்திடுவோம் !
இன்று தரும் இரத்தமென்றும்
உன்பெருமை பேசும் !
ஓர்நாளில் அது நண்பா
உன்னுயிரைக் காக்கும் .
தோண்ட தோண்ட ஊறுமந்த
ஊற்றுநீரைப் போல இரத்தம்
தானம் தர ஊரும் - நாளும்
தூய்மைகொண்டு வாழும் .
மேல்சாதி கீழ்சாதி
இரத்தத்திற்கு பேதமில்லை
வெட்டுவதால் வீழும்
தானம் தருவதனால் வாழும் .
ஒன்று எங்கள் உயிரென்று
குருதிதந்து வாழ்ந்திருப்போம் !
உலக இரத்ததான நாளில்
உறுதிமொழி நாமெடுப்போம் !