பூக்கட்டும் பூக்கள்!

பூ -நீ
செடிகள் சொல்லும் சேதி!
காதல் தூதுக்கு நீ சேடி!

வண்டுக்கென்ன தெரியும்!
கொடியின் வயதா புரியும்!
நீ பூப்பதால்
பூப்பெய்தி பூவை ஆகிறது
மரமும் செடியும்!

காற்றின் வேதனை புரிகிறதா?
நீ தீண்ட
களிவெறி கொள்கிறதே!

பழங்களை சபிக்கிறேன்
உன்னை உதிர்த்து
உருவம் கொள்வதால்!

வண்ணங்களின் வாழ்வாதாரம் -நீ
வசந்தத்தின் தொடக்கம்
வண்டுக்கு வழிகாட்டி!
மங்கா இளமையின்
சொந்தக்காரி!

உன்னை கிள்ளாத வரைக்கும்!

எழுதியவர் : சரவணா (14-Jun-12, 5:11 pm)
பார்வை : 333

மேலே