மரமாக முயற்சிக்கிறேன்
மரம் - நீ
குடை
பூக்களுக்கு!
நீ
விரிந்தால் தான்
மழை பூமிக்கு!
குடை
உன் வேர்களால்
மண்ணை!
கொடை
நீ
இருப்பதை எல்லோருக்கும்
அள்ளிக்கொடுப்பதால்!
கோடை
அது
இல்லை உன்னால்!
படை
நீ
தோப்பிலும் காட்டிலும்!
சல்லடை நீ
காற்றினை செரித்து
புதிதாக்குவதால்!
கோட்டை நீ
மண்ணுக்கும் நீருக்கும்!
சொடுக்கு உன் சட்டையை
மனிதப்பதர்களிடம்!
உன்னை வெட்டிட
அலையும் ஐந்தறிவு
கூட்டம்!
உன் வேரை அது அறுக்கும்!
அப்போதும்
நீ
பூக்களை தூவி
ஆசிர்வதிக்கிராய்!
உன் பெருமை - அது
உன் பொறுமை!
உன் கருணை
உன் பெருந்தன்மை
வேண்டும் எனக்கு!
நீ என்ன மரமா?
என்று
எவனும் கேட்டால்
"மனப்பூர்வமாக
மரம் ஆக
முயல்கிறேன்" -என்று
கூறுவேன்!