சின்னஞ்சிறு மழைத்துளியே ...!

சின்னஞ்சிறு மழைத்துளியே ...
என் சிரிப்பினில்...
சிதறி தெறித்த முகில்அழகே ...!
நீ விண்ணிலிருந்து விரைந்தாயோ ..
என் பெண்மனதில் புதுக்கோலம் வரைந்தாயோ ..!
வர்ணங்களை வானில் சிதறவிட்டு ...
சந்தோஷ சந்தங்களை என்னுள் விதைத்தாயோ ..?!
முகிலும்...முகிலும் சரசமாட ..
சிணுங்கல்கள் எதிரொலிததோ இடிபோல் ...?!
இடையிடையே மின்னல்கள் ..
அது காதல் உச்சத்தில்...விளைந்த முத்தத்தில்
இரவு வெட்கத்தில் சிரிக்கும்....
பெண்மையின் விழிகள்....?!
இறுதியில் பெருமழையோ..அது
முகிலினத்தின் வியர்வை துளியோ ..?!
சித்திரமாய் உனை நான் வரைந்தாலென்ன ..
பத்திரமாய் உனை என்னுள் மறைத்தாலென்ன ..?!
பொன்னிறமேனி சிலிரிக்குதே ...
பூவாய் நாணம் என்னுள் துளிர்க்குதே ..!!!
நனைந்தேனே உன்னால் ..பெண்மையை
என்னுள் நனைத்தேனே பெண்ணாய் ...!
சின்னஞ்சிறு மழைத்துளியே ...
என் மார்பில் ..சிதறிதெறித்த சிற்றருவியே..!
சிந்தை மறந்தேனடி ...சிரித்து மகிழ்ந்தேனடி ..
மண்ணில் பிறந்தேனடி ..மழையில் மலர்ந்தேனடி ..!

எழுதியவர் : இரா.அருண்குமார் O +ve (18-Jun-12, 2:05 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 308

மேலே