இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்- (கவிதை திருவிழா )

இந்தியாவின்
முதுகெலும்பு
உடைந்துவிட்டது
யார் வந்து தூக்கி
நிறுத்துவது.???..

கண்டுகொள்ள ஆளில்லை
கருத்து சொல்ல ஆயிரம்
பேர்களோடு நானும்

உணவு பஞ்சம்
வந்துவிட்டது
ஊர்கூடி அழ தயாராகுங்கள்

விவசாயம்
வீழ்ந்துவிட்டது
வீழ்ச்சிக்கு கரணம் நாமே

தண்ணீர் பஞ்சம் என்று சொல்லி
தராமல் போன தண்ணீரால்
கண்ணீர் தான் மிச்சம்

தொழில் சாலைகளால்
சாக்கடை தேங்கும்
இடமாகிவிட்டது
விவசாய பூமி

ஊழல் பெருகிபோச்சு
உணவு பதுக்கும்
பொருளாகி போச்சு

உலகிற்கு உணவளித்த
இந்தியா
உணவு பஞ்சத்தில்

மின்சாரம்
பற்றாக்குறை
பாகிஸ்தானிக்கு மட்டும்
ஏற்றுமதி ஆவது எப்படி??

இமயம் முதல்
குமரி வரை
குமரி பெண்ணாய்
நாணப்பட்டு கிடந்த விவசாயம்
வயது முதிர்ந்த பெண்ணாய்
நசுக்கப்பட்டு கிடக்கிறது

தலைப்பு செய்தியாய் வந்தாலும்
தினம் பழகி போன செய்தியாகிவிட்டது
விவசாகிகளின் தற்கொலை

வறட்சியும் ஏழ்மையும்
இந்தியாவின் முதுகெலும்பை
மெல்ல தின்று தீர்த்துவிட்டது

எங்கே தூக்கி நிறுத்த
எப்படி தூக்கி நிறுத்த???

பதில் சொல்ல ஆளில்லை
கருத்து சொல்ல ஆயிரம்
பேர்களோடு நானும்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (19-Jun-12, 3:08 pm)
பார்வை : 360

மேலே