ஒப்பில்லா உழவு -(கவிதை திருவிழா )

உலகத்தின் உயிரை
ஒவ்வொரு நாளும் தட்டி
எழுப்பும் உழவு

உணவில்லா உலகு எப்படி சுழலும்
அளவில்லா பசி வந்தால்
உண்மை புரியும்

கணிபொறி உலகமென்றாலும்
பசி வந்தால் பத்தோடு
கணிபொறியும் பறந்துதான் போகும்

உழவில்லை
உணவில்லை - உணவில்லை
உலகில் உயிரில்லை

உணவு பயிர்
செய்யும் இடமில்லை உழவு
உலகின் உயிர் பயிர்
செய்யும் இடம் உழவு

விதை புதைத்து
உயிர் வளர்க்கும்
உன்னத இடம்

மண்ணுக்கும்
நம் உயிருக்குமான
உறவு உழவு

செவ்வாய் கிரகம்
நீ சென்று வந்தாலும்
உன் வாய் கிரகம்
உணவையே சுற்றும்

அறிவியலால்
நீ 7 வது அறிவை பெற்றாலும்
உன் அடி வயிறு பசித்தால்
உணவைதான் தேடுவாய்

ஒரு நிமிடம்
உண்பதற்கு முன்
அதனை உற்று பாருங்கள்
உழவின் உன்னதம் புரியும்

பழுதில்லாமல்
உழுது
பொழுதில்லாமல்
உழைத்து
உழவன் ஓர் நிலையில்லாமல்
வாழ்ந்தாலும்
உனக்கான ஒரு பிடி உணவு
அவன் கையினாலேயே
உழவு உறுதி செய்யும்

உழவு மட்டுமே
உணவளிக்கும்
இந்த உழைப்பு மட்டுமே
உயிர் வளர்க்கும்

உழவனை போற்றி
உழவை வளர்ப்போம்

எழுதியவர் : பாலமுதன் ஆ (19-Jun-12, 3:10 pm)
பார்வை : 1520

மேலே