எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்

அவள் சிரித்து நின்றாளே
நான் அவளிடம் சென்றேனே
என்னிடம் கேட்ட தொகையைக் கொடுத்து
அவளை அடைந்தேனே

தொழிலில் அவள் வேசி
நின்றேன் நான் கூசி
கண்ணால் அவள் பேசி
அழைத்தாள் பேரம் பேசி

மோகம் தலைக்கேற
ஆசையும் எல்லைமீற
என் நிலை மறந்தேன்
அவள் பின் தொடர்ந்தேன்
தனியிடம் சென்றோமே

அவள் கவசம் ஒன்று தந்தாள்
அணியுங்கள் சிறப்பு என்றாள்
தூக்கி எறிந்தேனே
அவளை சுவைத்து மகிழ்ந்தேனே

மதங்கள் மூன்றாச்சு
உடல் சோர்வும் உருவாச்சு
சோதனை செய்தேனே
ரிசல்ட் வந்தது எய்ட்ஸ் தானே

அவளைப் பார்க்காதிருந்திருந்தால்
அவள் பேச்சை நானும் கேட்டிருந்தால்
எய்ட்சும் வாராதே
மரணம் சீக்கிரம் நேராதே

எய்ட்ஸ் வந்தால் போகாது
மருந்தால் முழுதும் தீராது
வராமல் காப்பதுதான்
நம் தமிழ்ப் பண்பாடு

ஒருவன் ஒருத்தி என்றார்
அது தானே சிறப்பு என்றார்
அதனை மறந்தேனே
அதனால் அமைதி இழந்தேனே !


(அவள் பறந்து போனாளே என்ற பாட்டு மெட்டில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவன் தன தவறை உணர்ந்து வருந்துகின்ற விழிப்புணர்வுப் பாடல். தமிழ் பண்பாட்டை உணர்ந்து நண்பர்களோடு பகிர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பங்களிக்கவும் )

எழுதியவர் : அலாவுதீன் (20-Jun-12, 9:03 pm)
பார்வை : 486

மேலே