எல்லாம் இருக்கிறது....

எல்லாம் இருக்கிறது...
நான் வளர்த்த மரங்கள்...
குதித்து ஆடிய ஆறு..
கண்டு.. கை தட்டி..
பார்த்து ரசித்த மலைத் தொடர்கள்..
அப்பா..
அம்மா..
அண்ணன்.. தங்கச்சி..
என்று வாழ்ந்த வீடு..
அந்த பதுங்கு குழி..
ஆர்மியன் சுட்டதில்..
பொத்தல் விழுந்த சுவர்கள்..
துவக்குகளின் சத்தம்..
பொடியன்களின்..வேகம்..
கண்முன் கதற கதற ..ஆர்மியனால்
கற்பழிக்கப்பட்ட பெண்களின் கதறல் சத்தம்..
இப்படிண்டு எல்லாமே என் கண்ணுக்குள்ளும்..
காதுகளுக்குள்ளும்..
எம் மக்கள் தான்
சொந்த மண்ணின் சுவாசத்தை தேடி...
எங்கோ...எங்கோ.. நின்று கொண்டிருக்கிறார்கள்..
விடியல் வருமா என்று தேடிக்கொண்டு..