மதில் மீது ஒரு பூனைக்குட்டி

மதில் மீது ஒரு பூனைக்குட்டி
இரண்டுபக்கமும் சாக்கடை
எந்தப்பக்கம் குதித்தாலும்
எமலோகம் போவது உறுதி
என்ன செய்வது தெரியாமல்
எல்லோரிடமும் உதவி கேட்டது

அங்கே வந்த அரசியல்வாதியோ
அந்த பூனை எந்த கட்சி?
ஆளும் கட்சியா? எதிர் கட்சியா?
எந்த கட்சியும் இல்லை அது
என்று தெரிந்ததும் அந்தோ! அவரோ
எதுவும் செய்யாமல் எகிரிவிட்டார்

அடுத்து வந்த ஆன்மீகவாதியோ
என்ன பாவம் செய்தாயோ பூனையே!
என்னிடம் சொல்லு செய்த பாவத்தை
ஆண்டவனிடம் சொல்கிறேன்
அவர்தான் வந்து உன்னை காப்பார்
அவரும் போனார் கடவுளைத்தேடி....

அதற்குள் கூடியது மாபெரும் கூட்டம்
பாதிக் கூட்டம் பரிதாபம் கொண்டது
பாவம் இந்த பூனை என்றே அவர்கள்
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர்
யார் சாகும் வரை? என்று தெரியாமல்
அந்த பூனையும் அலறியதே பரிதாபமாய்

இன்னொரு கூட்டமோ எரிந்தது கல்லை
இந்த பூனையோ ஏமாற்று பூனை
இருக்க கூடாது இந்த உலகில் என்றே
சங்கடங்கள் பல செய்தது அந்த பூனைக்கு

அந்த நேரம் அங்கே வந்தார் ஒருவர்
அவரோ ஒரு மக்கள் கவிஞர்
அவரோ பாடினார் அந்த பூனையிடம்
“பூனையே நீ பூனையல்ல காட்டு புலி
தன்னம்பிக்கையை தனக்குள் வைத்து
அவநம்பிக்கையில் அழலாமா?” என்று

அந்த பூனைக்குள் எழுந்ததே ஆவேச ஊற்று
ஆகாயத்தில் பறந்ததே கைகளை விரித்து
அதுவும் சிரித்ததே அவர்களே பார்த்து

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (20-Jun-12, 4:05 pm)
பார்வை : 167

மேலே