அறிவியலின் ஆக்கமும் அழிவும்

அறிவியல் வளருது
அறிவும் வளருது
அசிங்கமும் வளருது ,
அழிவும் வளருது !

அறிவியல் ஆனந்தம்
ஆச்சரியத்தில் தாய் குழந்தையின்
அசைவை ரசிக்கையில்
ஆனா பெண்ணா பார்க்க ஒரு கூட்டம் !

ஒளியை மிஞ்சும் வேகத்தில்
ஒவ்வொரு வீட்டிலும் இன்டர்நெட் ,
கல்வி கற்பத்தில் சிலர் நாட்டம் ,
கலவி கற்பதில் பலர் நாட்டம்!

அணுவிலிருந்து மின்சாரம் எடுக்க
ஒரு கூட்டம் ,
அதனை அணுகுண்டாய் மாற்ற மறு கூட்டம் !

அவசர தேவைக்கான செல்போன்
அவசர வாகனத்தில் இவன் போகவா ,
இன்பமாய் பேசிக்கொண்டே
துன்பத்தில் முடியும் வாகன விபத்துகள் !

தொழிற்சாலை பெருகுது
தொல்லைகளும் பெருகுது ,
சுதந்திர காற்று கூட
காசு கொடுத்தால் கிடைக்கும் நாளை !

விஞ்ஞானம் பெருகுது
விவசாயம் சுருகுது ,
அறிவியல் வளர்ச்சி மோகம் ,
இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை !

அம்மா கொடுத்த இட்டிலி கூட
செட்டிநாட்டு கடையில் கிடைக்க ,
இயற்க்கை கொடுத்த நீர்கூடவா
விஷமாய் போகும் ,
மினரல் வாட்டர் மயக்கத்தில் பாதி உலகம் !

இயந்திர காலமாச்சு
மனிதாபிமானம் செத்துபோச்சி ,
இயற்கையாய் நடந்த இறுதி சடங்குகூட
இயந்திரம்தான் செய்யுதையா !


தொடரும் -...............

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Jun-12, 11:40 pm)
பார்வை : 7906

மேலே