ஹாய் செல்லக்குட்டி...........
விடிந்தும் விடியாததுமான காலைப்பொழுது.......... சூரியனை நான் மறைத்து வைத்திருக்கின்றன் என்ற
கொஞ்ச நேர சந்தோசத்துடனான மிதமான இருள்.......... பனியுடன் கூடிய மெல்லிய த்ன்றல்..........என் மேனியைத்தழுவ.........
என் சோம்பலைத்துரத்திவிட்டு ........மெதுவாக எழும்பி காலைக்கடன் முடித்து ,........
வீட்டில் ஒலிக்கும் சுப்ரபாதத்துடன் அந்த தெய்வீகத்தன்மையை அனுபவித்துக்கொண்டே ........
வாசலில்
நீர் தெளித்து அழகிய புள்ளிக்கோலமோன்றை போட்டு விட்டு .......தள்ளி நின்று
என்னுடைய திறமையை நானே பாராட்டி விட்டு........எனக்குள்ளே
சிரித்துக்கொண்டு பூஜையறையில் விழ்க்கேற்றி பூஜையை
முடித்துவிட்டு..........கடவுளுக்கு என் அன்பை செலுத்தி விட்டு
...............
ஓடோடி வந்து என் செல்போனை எடுத்து...........
என் செல்லக்குட்டிக்கு ...............ஹாய் செல்லக்குட்டி குட் மோர்னிங்க்டா ...............இன்னும் எழும்பலையா?இது நான் .........
எதிர்
முனையிலிருந்து தூக்கக்கலக்கத்தில் ஒரு குரல் ம்..ம்......ம்.......
உன் போனைத்தான் எதிர் பார்த்துக்கொண்டிருந்தேடா செல்லம்.........அசடு வழிய
சொல்வான் ,,,,,,,,,,,,,,,,அவன் என் அன்புத்தோழன்