குறுக்கெலும்பு உடையும்

பொன்னைக் கேட்டிருந்தால் மொத்தம் கொடுத்திருப்போம்
கொடுத்தே வளர்ந்த இனம் என்னது,
பெண்ணையும் மண்ணையும் கேட்கிறாய் தூர நின்று,
அருகில் வாடா பெண்களே பலி கொடுத்து
மண்ணிற்கு உரமாக்கிடுவர் உன்னை,
எழுத்துக்கே எங்கெங்கோ கடன் பெற்றவனே எம்
மொழியின் எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இமை
முடி அளவேணும் இருக்குமா உன் மொழி,
என் குடியின் இனியப் பயணம் இம் மண்ணின்
மடியோடு கடந்தது இனியும் கடக்கும்,
குறுக்கே வருபவர்களின் குறுக்கெலும்பை உடைக்கும்,
எண்பது நாடுகளில் உள்ள எம் சோதரர்களின் தலைகள்
யாவும் சூழ்ச்சியின் வலைகளில்,
நிலை மாறும் மூடர்களே எம் மண்ணின் மீது
எனக்குள்ள உரிமையை நிலை நாட்டுவோம்.
உன் தலையை தீயில் வாட்டுவோம்.

எழுதியவர் : த.பொன்மாரியப்பன், (21-Jun-12, 11:20 pm)
சேர்த்தது : த.பொன்மாரியப்பன்
பார்வை : 197

மேலே