மஹியின் மரணம்
அழகே மஹி – உன்னை
ஆழ்குழாய் கிணற்றில் தள்ளி
அத்தனை இந்தியர்களும்
ஆடை இன்றி நின்றோம் – அரக்கர்களாய்
தோண்டுவதில்
எத்தனை முறை – இந்த
மெத்தன முறை
நீர் எடுக்க தோண்டி
நின் உயிர் குடித்து நின்றோம்
என்பத்தாறு மணிநேரம் - பாவமிதற்க்கு
எந்த ஆறு பரிகாரம்
இப்படி செய்த சமூகத்தை
இனி பார்க்க கூடாதென
இறைவனே உன்னை மேலேடுத்தார்
மன்னிப்பு கேட்க முடியாமல்
மௌனமானோம் மஹி
இனி இப்படியோரு இரங்கல் கவிதை
எழுத நேர்ந்தால் எம் எழுத்தறிவை
அழுத்துவிடு என் இறைவா...