ஊர் தேர்
சொந்தங்கள் போனால்
அழுவதற்கு
யாருமில்லை
ஊர்வலமாய் !
தெய்வங்கள் போனால்
சுற்றி வர
சுற்றி வர எல்லோரும்
நகர்வலமாய் !
கால ஓட்டத்தால்
ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கைப் பந்து
தேர்பவநியாய் !
எல்லா நாட்களும்
சுற்றிக் கொண்டிருக்கிறது
சக்கரங்கள்
ஏதும் இல்லாமலே !