அம்மா,அப்பா எனும் உயிர் மெய்

நாம் பிறந்ததும்
வளர்க்க வேண்டியது
தாயின் கடமையா!
இல்லை
தந்தையின் கடமையா!

இருவரும் சேர்ந்து
கொஞ்சி மகிழ்ந்து
மார்பிலும்,தோளிலும்
வளர்ந்து,ஆளாக்கி
காலை,மாலை உணவு கொடுத்து
தாலாட்டி,சீராட்டி,பள்ளிக்கு
அனுப்பி கல்லூரிக்கு அனுப்பி
அப்பப்ப! அவர்கள் படும் பாடு
சொல்ல வார்த்தைகள் இல்லை!

அவர்கள் திருமணம் என்ற
பந்தம் உறவுகளால்
உங்களைப் பிரித்து விடுகிறார்கள்.
ஏன்? புறக்கணிக்கப் படுகிறார்கள் .
ஆனால்.. மகன்,மகள் இருந்தும்
அனாதையாக்கப் படுகிறார்களே!

நீங்கள்
படுக்கையில் கிடந்தபோது
சிரமப் படும்போது....
எங்களை வளர்த்தபோது
உங்களுக்கு வலிக்கவில்லையே!
ஏன்?எங்களுக்கு என்று
கேட்காதீர்கள் தாயே!

எங்களுக்கும் உங்கள் காலம்
வரும் போது எங்கள் நிலை
எவ்வாறு இருக்குமோ? எனத்
தோன்றுகிறதே! நெஞ்சில் நெருஞ்சிமுள்
குத்துவது போல் மனசெல்லாம்
வேகுதே நெருப்புக் குழம்பாய்!

அம்மா! வலிக்கிறதே மனது!
காலம் தான் பதில் சொல்லும்
தாயே! உன்னைப் போல் எதுவும்
என்னால் செய்ய இயலவில்லையே! தாயே!

காடு மேடு நடந்து எங்களை வளர்த்தாய்!
நீ பட்ட துன்பம் எங்களுக்கு ஒரு துளி
கூட இல்லையே ஏன்?

பதில் சொல்லும் அம்மா !
காலம் பதில் சொல்லும்! இனி
புது உலகமாய் பிறப்போம் தாயே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Jun-12, 12:51 pm)
பார்வை : 319

மேலே