வயிற்றுப் பசி குறுங் கவிதைகள்

மழை!
மண் வாசம் !
பேருந்து நிலையம் !

புகை வண்டி நிலையம் !
கோயில் வாசல்!
விழிகள் தோறும் வழித்தடம் !

எங்கெங்கும்
பறந்து விரிந்தது
காற்றின் ஓசை!

ரீங்காரமிட்டபடியே
வண்டினத்தின்
ஆர்ப்பாட்ட பசி ..!

மலர்கள்
விழித்தன
இனத்தைப் பார்த்து !

சகித்துப் போனது
கீதங்கள்
உபநயனம் பசி ...!

வதைக்கும் பசி
தெரு முனை
குப்பைத்தொட்டி!

நாய்கள் சண்டை!
பன்றிகள் கூட்டம் !
தெரு முனையில்...!

நாய்களோடும்
பன்றிகளோடும்
மனிதன் எச்சிலையாய்

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Jun-12, 2:07 pm)
பார்வை : 324

மேலே