காலங்கள் பேசும்
நாட்களின்
கைப் பிடியில்
இதயமாய் காலம்..!
கடிகார முல்லை
நகர நகர்த்த
எண்ணியே காலம் ..!
ஊன் சக்தி
உள்ள வரை உயிர்
வாழ ஆகாதெனின்
படுக்கையே பாரமாய் ...!
பனிப் புகை உறிஞ்சிவிட்டு
உச்சி நோக்கும் கதிர வனும் தேய்ந்து
உயர்ந்து செல்கையில்...!
நரம்புகள் கழன்று
எலும்புகள் தேய்ந்து
முடிந்தும்முடியாமல்
படுக்கையே பாரமாய் ...!