நான்,பிறந்த நாள்

ஈரைந்து மாதம்
கருவோடு என்னைதாங்கி
உறங்கும் போதும்
பக்குவமாய் திரும்பி
படுத்து
பத்தியமாய் உணவுண்டு
நான் உதைத்த
உதைகளையெல்லாம்
இன்பமாய் அனுபவித்தவள்
எனக்கொன்று என்றால்
துடிதுடிப்பவள்
இன்று
நான்,என் தொண்டை தண்ணீர்
வற்றும் வரை
அழுகிறேன் -ஆனால்
அவள் - என்
உச்சந்தனை முகந்துக்கொண்டு
உவகையுடன்
என்னை பார்த்து
சிரிக்கின்றாள்
ஏன்னென்றால்
இன்று தான் நான் பிறந்துள்ளேன்....! ! ! !

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (25-Jun-12, 3:03 pm)
பார்வை : 330

மேலே