joke

"தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே.. எப்படி..?" "அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே.. எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!"
"திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!" "அய்யய்யோ... அப்புறம்?" "அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"
ஒரு ஜவுளிக் கடையில்.. "டேய் மொக்கை.. இந்த சட்டையைப் பார்த்தியா..? 2000 ரூபாயாம்.. சரியான கொள்ளைக்காரப் பசங்க.." "சரி.. சரி.. பேசுனது போதும்.. சீக்கிரம் மூட்டையைக் கட்டு.. விடியப் போகுது..!"
மொக்கையின் மகனிடம் வகுப்பு ஆசிரியர்.. "அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருக்கே சின்ன மொக்கை.. இதே போல ஆண்டுத் தேர்வுலயும் மார்க் எடுக்கணும்.." "அது கொஞ்சம் கஷ்டம்தான்.. அந்த வினாத்தாள் எங்க அப்பா வேலை செய்யற அச்சகத்தில பிரிண்ட் பண்றாங்களோ என்னவோ..?"
"உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்" "சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா?"

எழுதியவர் : திரு .மு.ராஜ்குமார் (26-Jun-12, 10:31 pm)
பார்வை : 453

மேலே