சமூக அவலங்கள் (கவிதை திருவிழா)
செல்வந்தர் வாழும் செந்தமிழ் நாட்டிலே,
சிக்னலின் ஓரம் சில்லரை சத்தம்...
சேமித்துவெய்க்க ஆசை இருந்தும்,
சேமிக்க இருப்பதிங்கோ அரைப்படி இரத்தம்...
மண்புழுவைபோல் வாழும் மக்களின் நிலைமாற்ற,
மக்களாட்சியால் வராதோ இங்கு அந்த மாற்றம்...
ஓட்டு போட்டு போட்டு வயது ஒன்றே ஏறிச்செல்ல,
ஒட்டு போட்ட ஆடை அணிந்த ஏழைக்கோ என்றுமே ஏமாற்றம்...
மீன் பிடிக்க செல்லும் எம்தமிழ் தோழன்,
எல்லை மீறி செல்லாது வழி மரிக்கப்படுகிறான்...
தூண்டிலுடன் சென்ற அவனோ,
துப்பாக்கிக்கு இறை ஆகிறான்...
அவலத்திலும் பெரிய அவலம்,
தமிழ் மொழியை மதியாது,
ஆங்கில மோகம்...
இந்த நிலை தொடர்ந்தால்...
தமிழ் மொழியோ(செம்மொழி) சில வருடங்களிலேயே,
இவ்வுலகை விட்டு விடைபெற்று போகும்...
புற்றுநோய் போல் ஊழல் நாடெங்கும் பரவியுள்ளது,
லஞ்ச ஒழிப்பு துறைக்கும் லஞ்சம் கொடுத்தால் தப்பித்து வர வழயுள்ளது...
தனிமனித ஒழுக்கம்,
கடை பிடித்தால் எவர்க்கும்,
நன்மை ஒன்றே நடக்கும்,
நம் நாட்டின் நலன் சிறக்கும்...