ரஜினி.....குப்பையை குப்பைத் தொட்டியிலிடக் கற்றுக்கொடுங்கள், உபயோகமாக இருக்கும்

இன்று ரஜினி நடித்த சிவாஜி படம் பார்க்க நேர்ந்தது. அதில், வாயில் அசைபோடும் சுவிங்கத்தை, எவ்வாறு பாலிதீன் பையிலிருந்து கிழித்தெடுத்து கையில்தட்டி வாயிற்கு அனுப்புவதென்று style ஆக காட்டுகிறார், குழந்தைகளுக்கு. ஆனால், கிழித்த பாலிதீன் பைகளை எவ்வாறு அங்குமிங்கும் போடாது குப்பையில் இடுவது என்பதை குழந்தைகளுக்கு காட்ட அவருக்கு தோன்றவுமில்லை; நற்க்கருத்தை குழந்தைகளிடம் எடுத்துச்செல்ல தெளிவுமில்லை.
(பொதுவாக குப்பைகளை குறிக்கிறேன், குறிப்பிட்டு பாலிதீன் பையை அல்ல)

எதற்காக இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், குழந்தைகளுக்கு இத்தகைய சிறு சிறு சேஷ்டைகள்தான் மனதில் சுலபமாகப் பதியும்.
முக்கியப் பிரபலங்கள் "படத்தை வணிகரீதியாக மட்டும் பார்க்காது", நல்லவை எவை, கேட்டவை எவை எனப் பிரித்துப்பார்க்கவேண்டும். ஏனெனில், அவர்களை பலர் நோட்டமிடுகின்றனர்.

(குறிப்பு: 50 வயது மதிக்கத்தக்க ஒரு வெளிநாட்டு நபர் ஒருவரும், நானும், ஒரு சிறு கடையில் சில உணவுப்பொருட்களை வாங்கினோம். உண்பதற்குமுன்,பாலிதீன் பையிலுள்ள உணவை வெளியிலெடுத்த வெளிநாட்டு நபர், முதலில் பாலிதீன் பையை அவரது முழுக்காற்சட்டைப் பையில் சரியானமுறையில் மடித்துவைத்து, பின், வீடு திரும்பிய பிறகே குப்பையை குப்பைத்தொட்டியில் போட்டார்.
அவ்வாறு, அவர் சட்டைப் பையில் பாலிதீன் பையை மடித்துவைக்கும்போது, நான் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் இதுதான், "இத்தகைய வழிமுறைகளை, நாங்கள் சிறுகுழந்தையாக இருக்கும்பொழுதே எங்களுக்கு கற்ப்பிக்கப்பட்டது; குப்பையை குப்பைத்தொடியில் போடு.")
ஆகையால், குழந்தைப் பருவத்தில், எது கற்ப்பிக்கப்பட்டாலும், அது மனதில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதியும்.

குழந்தைகளுக்கு நற்கருத்தை எடுத்துக்கூறவேண்டும் என்பதே என் வாதம்.

(குறிப்பு: பாலிதீன் பைகளை உபயோகிப்பது தீங்கென, நண்பர் தமிழ்தாசன் எழுதிய "நெகிழி" படைப்பில் மேலும் காணலாம். தயவுசெய்து, பாலிதீன் பைகள் உபயோகிப்பதை தவிர்க்கவும்)

எழுதியவர் : A பிரேம் குமார் (1-Jul-12, 1:30 pm)
பார்வை : 390

சிறந்த கட்டுரைகள்

மேலே