எழுத்துத் தளத்தில், A. பிரேம் குமாரின் ஒரு கருத்துப்பரிமாற்றம்

முதலில் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு நிலாசூரியன், ஐயா எசேக்கியல், ஐயா Dr கன்னியப்பன், நண்பர் திரு பொள்ளாச்சி அபி, தோழர் திரு. புதுவை காயத்ரி, தோழர் திரு. அருண் குமார், தோழர் திரு. மு.ரா அவர்கள் அனைவருக்கும், மற்றும் தோழர் ஈஸ்வருக்கும் மற்றும் எழுத்துத் தள நிர்வாகத்துக்கும், எழுத்துத் தளத்திலுள்ள அனைத்து தோழர்/தோழிகளுக்கும், வளரும், தமிழ் வளர்க்க பாடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் மனதில்பட்ட ஒரு உண்மையை பகிர்ந்துக்கொள்கிறேன். பலமுறை, ஐயா எசேக்கியல் மற்றும் ஐயா Dr. கன்னியப்பன் அவர்கள், பலரின் படைப்புகளுக்கு கருத்து தெரிவிக்கையில், எழுத்துப்பிழைகளை மற்றும்
கவிதை எழுதும் முறைகளை சரிசெய்துக்கொள்ள கற்றுக்கொடுப்பார்கள்.

நண்பர் திரு. நிலாசூரியன் அவர்களின் கவிதைத்திருவிழாவின் துவக்கம், தோழர் திரு. புதுவை காயத்ரி அவர்கள் கூறியவாறு,
எழுத்துக்களை ஏனோ தானோ என்று திரியவிடாது, ஒரு விதிகளுக்குட்பட்ட வட்டத்திற்குள் பலரை வரவழைக்க முயன்றது. இவற்றாலும், எழுத்துப்பிழைகளை சரிசெய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, தமிழ் வளர்க்க, எழுத்துத்தளத்தில் பல முக்கிய நல்மாற்றங்கள் நடந்துவருவதைக் காண்கையில்,
"தமிழ்நாடி - தமிழ்த்தாயின் உயிர்நாடி" - இங்கிணைந்து
நம் உள்ளங்களில் மலர்ந்து,
எண்ணத்தில் ஒளிர்ந்து.
மீண்டும் விரல்களில் எழுத்துக்களை விதைக்கிறது.

மகிழ்ச்சி கொள்கிறேன். இத்துவக்கம் இனிதே பயணிக்க.
உடன்,
வணங்குகிறேன் கற்றுக்கொடுக்கும் ஆசான்களுக்கும்
வாழ்த்துகிறேன் தமிழ் வளர்க்கத்துடிக்கும் இள ரத்தங்களுக்கும்

மறந்துவிடாதீர்கள்,
தமிழ்இ ரத்தம்
ஓடு முடலில்
ஓடு முள்ளத்தில்
என்றுமில்லை மூப்பு!

இக்கட்டுரையை முடித்துக்கொள்வதற்கு முன்னர், மீண்டுமொருமுறை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு.

-----முற்றும்------

எழுதியவர் : A பிரேம் குமார் (1-Jul-12, 11:28 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 336

மேலே