விவசாயி விவசாயம்

புரட்சி வேண்டும்
விவசாய புரட்சி வேண்டும்

விதை விதைத்து
அந்த வித்துக்காக
தன அயராத உழைப்பை விதைக்கும்
விவசாயிக்கு விடியல் வேண்டும்

விளை நிலங்கள்
விலை நிலங்களாக
மாறுவதை தடுக்க வேண்டும்

உழைப்போர் எண்ணிக்கை
உயர வேண்டும்
உற்பத்தி திறன் பெருக வேண்டும்

பல உயிர்களை வாழவைக்கும்
விவசாயம் வளர வேண்டும்

பட்டபடிப்பு படித்தோரை கௌரவிக்க
பெயருக்கு பின்னால் பட்டம் இருக்கு

இவ்வுலக மக்கள் அனைவரும்
உண்பதற்காக உழைக்கும் உத்தமனை கௌரவிக்க என்ன பட்டம் இருக்கு???
"பட்டிக்காட்டான், பாமரத்தான்" என்ற
இந்த வார்தையைதவிர


விவசாயத்தை ஊக்குவிக்க
விவசாயிக்கு என்ன வசதி செய்து இருக்கு?

தனக்காக மட்டும் இல்லாமல்
அனைவருக்காகவும் அயராது உழைத்து
உருவாக்கும் விவசாயி ஏழையாக....
அதனை கொள்முதல் செய்பவன் வசதியாக....

*விவசாயிக்கு சேர வேண்டிய
பல நல்ல திட்டங்கள்
சில அரசாங்க பெருச்சாளிகளால்
அமுக்கப்பட்டுவிடுகிறது

பச்சைகம்பலம் விரித்து வெளிநாடு
விற்பனை நிலையங்களை வரவேற்கும்
நம்நாடு பசுமையாக மாற பல
பலத்த திட்டங்களை உருவாக்காமல்
விட்டுவிடுகிறது..

*எந்த ஒரு மாணவனின் கனவும்
கைதேர்ந்த நல்ல ஒரு விவசாயியாக
விவசாய புரட்சியளானாக
ஆகவேண்டும் என இருப்பதில்லை

ஏனெனில் அவர்களுக்கு விவசாயத்தின்
முக்கியத்துவம் உணர்த்தபடுவதில்லை
அவர்களின் பெற்றோரும் விரும்புவதில்லை


மருத்துவரின் மகன்
மருத்துவராக ஆவது பெரிதில்லை

அரசியல்வாதியின் மகன்
அரசியல்வாதியாக ஆவது பெரிதில்லை

நடிகனின் மகன்
நடிகனாக ஆவது பெரிதில்லை

விவசாயின் மகன்
விவசாயி ஆவது பெரிதில்லை
மருத்துவன் ஆவதே பெரிது
மகாநடிகன் ஆவதே பெரிது
அரசாங்க ஆளுனராக ஆவதே பெரிது

எந்த ஒரு
குறு விவசாயியும்
தன மகன் விவசாயியாக
வரவேண்டும் என
விரும்புவதும் இல்லை
விவசாயின் கனவு தான் படும் கஷ்டம்
தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதாகவே இருக்கிறது..




PRIYA

எழுதியவர் : PRIYA (30-Jun-12, 12:05 am)
பார்வை : 2283

சிறந்த கட்டுரைகள்

மேலே