தடுக்கிவிழுந்தாலும்... எச்சரிக்கை!!

எழுத்து.காம் தோழர்களுக்கு, வணக்கம்.. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை!
என் வாழ்வில் நான் அறிந்த சில உண்மை நிகழ்வுகளை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.
பெரிதாக அடிபட்டால்தான் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து என்பதில்லை,
சின்ன அடிகூட உயிரைக்குடித்துவிடும். உடலுறுப்பிற்கு பேராபத்தைக் கொடுத்துவிடும்.
தலையில் அடிபட்டால் அதை அலட்சியப்படுத்தவே கூடாது. உடனடியாக கண்காணிக்க வேண்டும்.
முதல் சம்பவம்: எங்கள் வீட்டீலேயே நடந்த சம்பவம் இது. எங்களின் இளைய மாமாவிற்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். திருமணத்திற்கு இன்னும் பதினெட்டு நாள் தான் இருந்தது. எங்களின் பெரிய மாமாதான் எல்லா வேலைகளையும் ஓடி ஓடி கவணித்துக் கொண்டிருந்தார்.
மணப்பெண் எனது அக்கா (சித்தியின் மகள்) ஆகவே, பெண்வீட்டாரும் நாங்கள்தான் என்பதால், எங்கள் குடும்பமே முழுமூச்சாக திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தது. நிகழ்வன்று காலையில் எங்கள் மாமா குளித்துவிட்டு வந்தவர்தான், பாசியில் (பசலை) கால்வைத்து வழுக்கி பின்பக்கமாக விழுந்துவிட்டார். கண்கள் நிலைகுத்திவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், அரக்க பரக்க தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவர் பரிசோதித்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்றார். காரணம், பின்பக்க தலையில்பட்ட சின்ன அடிதான். திருமணம் களைகட்டியவீடு, இடியாய் வந்த மரணத்தால் நிலைகுலைந்துபோனது.
இரண்டாம் சம்பவம்: இது எனது அலுவலகத்தில் பணிபுரியும் தோழியின் மகனுக்கு நிகழ்ந்தது. அப்போது அவன் நான்காம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் விளையாடும்போது கீழேவிழுந்து கையில் அடிபட்டது. எங்கள் தோழியும் சிறுகாயம் தானே என்று, காயத்திற்கு மருந்துபோட்டு விட்டுவிட்டார். சில நாட்களுக்குப்பிறகு, பையன் பள்ளியில் மயங்கிவிழுந்துவிட்டான் என அழைப்புவரவே என் தோழி உடணடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். மருத்துவர்களும் சரியாக சாப்பிடாததால்தான் இந்த மயக்கமென மருந்து கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால், பையன் மீண்டும் அடுத்த நாள் வீட்டிலேயே மயங்கி விழுந்துவிட்டான். இப்போது, மருத்துவமணையில் சோதித்துவிட்டு உடம்பில் குறையில்லை என்பது தெரியவரவே, முழு உடல் பரிசோதனைக்கு சொல்லிவிட்டனர். பரிசோதனைக்குப்பின் தான் தெரியவந்தது, தலையின் பின்புறம் அடிபட்டதால், மூலை நரம்பு அறுந்து இரத்தம் உரைந்திருந்தது. பின், மருத்துவர்கள் போராடி அறுவை சிகிச்சை செய்து அவனின் உயிரைக்காப்பாற்றினர். இதனால், என் தோழிக்கு மிகுந்த மனக்கவலை. தலையில் அடிபட்டது முதலிலேயே தெரிந்தால், சில மாத்திரைகள் கொடுத்தே இரத்தத்தை கரைத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். குழந்தைகள் விழுந்துவிட்டால் முதலில் நாம் தலையில் தடவி அடிபட்டுல்லதா என கவணிக்க வேண்டும். இல்லையேல் என் தோழிபோல் அவதிபட நேரிடும்.
மூன்றாவது சம்பவம்: எனது தம்பியின் தோழனுக்கு தெரிந்தவரின் மகன், கல்லுரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான். அன்று, தேர்வு ஆதலால், வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவேன் என சொல்லிவிட்டு புறப்பட்டிருக்கிறான். பேருந்தைப்பிடிக்க வேகமாக ஓடி கால்தடுக்கி விழுந்துவிட்டான். சின்ன சிராப்புகள்தான் பட்டிருக்கிறது. சரியென விட்டுவிட்டு தேர்வெழுதும் அவசரத்தில், கைகால்களை துடைத்துக்கொண்டு, தேர்வெழுதிவிட்டு வீட்டிற்கு வந்தான். சிரிது நெரம்தான் ஆகியிருக்கும், மஞ்சல் நிரமாக வாந்தியெடுக்கவே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவர் சோதித்துவிட்டு, வரும் வழியிலேயே முடிந்துவிட்டது என்றார். அப்போதுதான் பார்த்திருக்கிறார்கள், அவனது பின் தலையில் அடிபட்டு, முடிகளுக்கிடையே சிரிதாக இரத்தம் உரைந்திருந்ததை.
நாண்காவது சம்பவம்: எனது தோழியின் அத்தை சமீபத்தில் திடீரென காலமானார். காலையில் சரியாக சாப்பிடாமல் மாத்திரைகளை மட்டும் போட்டுக்கொண்டு, வெய்யிலில் சென்றுள்ளார். மயங்கி பின்பக்கமாக கீழவிழுந்தவர்தான். எழவில்லை, அங்கேயே நின்றுவிட்டது. அவர்களை குளிக்கவைக்கும் போதுதான் தெரிந்தது, பின் தலையில் அடிபட்டிருப்பதை.
சின்ன சின்ன அடிகள்தான் ஆனால், பெரும் இழப்பு…
எப்போதும் எச்சரிக்கையாக இருப்போம். யாராவது கீழே விழுந்துவிட்டால் முதலில் தலையில் அடிபட்டுள்ளதா என கவணியுங்கள். குறிப்பாக, குழந்தைகளை உடனேயே சோதித்துவிட வேண்டும்.
எச்சரிக்கையாக இருப்போம், பெரும் ஆபத்துகளை தவிர்ப்போம், நன்றி…

எழுதியவர் : எழுத்து சூறாவளி (29-Jun-12, 12:06 am)
பார்வை : 2038

மேலே