தமிழ் வலை வீசி கவிமீன் பிடி

எண்ண வலை
எழிலாய் வீசி
வண்ணக் கவிதை
வசமாய் பிடிக்க
கனவுக் கடல் செல்கிறேன்
கன்னித் தமிழ் தோணியில்...
பாறைகளாய் பிறமொழிகள்
பதம் பார்க்க காத்திருக்க
பத்திரமாய் பயணிப்பேன்
பலநூறு கவி பிடிப்பேன்....!

எழுதியவர் : (1-Jul-12, 2:42 pm)
பார்வை : 291

மேலே