நாங்கள் தமிழர்கள் !!,
ஆறறிவுப் படைத்த மிருகமல்ல நாங்கள்
தீவினைச் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு
அறிவைத் தந்திரமாய்ப் பயன்படுத்தும் நாங்கள்
துள்ளும் மானல்ல புலியைக்கண்டு அஞ்சுவதற்கு !
சிறிய மீனல்ல கொக்கின்வாயில் அகப்பட
சீரும் சுறாக்கள் பிறந்தோம் வெல்வதற்கே!
பூச்சிகள் அல்லநாங்கள் சிலந்திவலையில் பிடிபட
வீரக்கழுகுகள் பிறந்தோம் விண்ணில் பறப்பதற்கே!
எங்கள் உழைப்பெல்லாம் பாயும் ஏவுகணை
எங்கள் வெற்றித்தொடும் வானின் உச்சிதனை !
உயர்மக்கள் வாழும்நாடு எங்கள் நாடு
இதுவான் ஓங்கும் புகழ்பெற்ற தமிழ்நாடு
இனிமையில் குறைவற்ற மொழி எங்கள்மொழி
இதுஎங்கள் நாவை இனிக்கவைக்கும் தமிழ்மொழி!
தீயதை எதிர்த்து முழங்கும் சிங்கங்கள்
நாங்கள் , விதியினை மற்றும் தமிழர்கள்!!!!