மயானம் பேசுகிறது ஒரு ரூபாய்ச் செலவுக்கு ஒன்பது ரூபாய் நட்டமா!

இதுத்தனிமைக்காடு!
இங்கு
வந்தவரெல்லாம்
மீண்டு போனாதாய்
சரித்திரம் இல்லை...
என்னை
மன்னித்துவிடு தோழா!
நீ,
உன் தாய் மடியில்
வாங்கிய முத்தங்களெல்லாம்,
மென்றுத்தின்ன முடியாத,
வாய்க்கரிசியாகவும்
மாறும்...
என்னை
மன்னித்துவிடு தோழா!
தாய்க்குக்கொல்லி வைக்க,
நீ
வேண்டும் தோழா!
உன்னால்
முடியாவிட்டால்
உனக்குக் கொல்லிவைக்க,
நான் போதும் தோழா!
அன்று உனக்காக
செத்துப் பிழைத்தாள்!
இன்று
ஏன் பிழைத்தோம்
என்று செத்தாள்
தோழா!
அழுததைவிட
அதிகமாய்ச்சிரித்தாள்
அன்று....
அதிகமாய்ச்சிரித்ததை
விட
அதிகமாய்ச்
சிரிக்கப்படுகின்றாள்
இன்று....
நியாயம்
அநியாயம்
எழுதப்படாத
அத்தியாயம் நான்
தோழா!
ஆத்தங்கரை வீட்டு
அடுப்பெரிக்க
ஆளில்லை தோழா....
அதனால்,
உன்
மகனை இங்கு
அனுப்பி வை தோழா!
அவனுக்கு
தாயருமையை
சொல்லி வளர்க்கிறேன்.
சொல்லிப்புரியாவிட்டால்
அவனையும்
அள்ளிஎரிக்கிறேன்
தோழா!
நூற்றில் ஓர்
நூலென்று
நூதனமாய்
உன்னை
நூற்றிட்டாள் தோழா...
ஆனால் நீயோ.
சேற்றில் செய்த
செங்கல்சூளைக்கு
அவளை
விலைபேசிவிட்டாய் தோழா!
பூரான் வேகமாய்,
உன்னை
புதைப்பார்கள் தோழா...
ஆனால் நீயோ,
புலியின் வேகமாய்
எரிந்து முடிவாய்
தோழா!....
பனிக்குடம் காயம்பட்டு
அவள் கருவரையும்
வெடித்திருக்கும் தோழா!
உன்னால்அதையும் பொறுத்துக்கொண்டு
பள்ளிழித்தாள் தோழா!
பள்ளியறையில்
இச்சைஇரத்தம் குடித்ததால்,உன்னால்
கள்ளிஅறையில்
பச்சைஇரத்தம் குடிக்கிறாள் தோழா!
வீதியில் போய்
விறகு தேடவேண்டும்
என்பதால்,
விஷம் கொஞ்சம் கொடுத்து
வீதியிலே அனுப்பிவிட்டாயோ தோழா!
ஊரான் வீட்டு
இலவுக்கு ஓடிவந்தாய்
தோழா!
இன்று
உன் வீட்டு இலவென்று
தெரியாதோத் தோழா!
தெருவில் திரியும்
ஓர் தேரைக்குழந்தை
போல்
தீக்காயம் பட்டு
வெந்தத் தோலுடன்
திரிகிறாள் தோழா!
உனக்கு
தாய்ச்சோறு போட்டவள்
நாய்ச்சோறு தேடுகிறாள் தோழா!
பசியோடு அலைந்தே
பார்வை இழக்கிறாள்!
பாவம்,
உன்னை பெற்றதால்
தூங்கும் இடம்
தெரியாமல்
துறவு முடித்துவிட்டாள்....
அவளின் இலவுக்கு
கருணை இல்லமே
குருணை கொட்டுகிறது
தோழா!.!
காசுகொடுத்துத்தானே
உன் கல்யாணக்காரியம்
செய்து முடித்தாள்.!
ஒரு ரூபாய்க்குத்தான்
ஒரு கிலொ அரிசி
விற்க்கிறதே!...
ஒரு ரூபாய்
செலவழித்தால்
உன் சாவுக்கு ஒன்பது
ரூபாய் நட்டமோ!
உன்னை மன்னிக்க,
நான் மனிதன் இல்லை தோழா!
உன்னை மன்னிக்க
என்னை தண்டித்து,
தீயில் விழுந்து
உனக்கு,
தியாகம்
செய்தாள் தோழா...
உன்னை
மன்னிக்க முடியாமல்
என் இறுதிநொடிகள்
அவளை எரிக்கிறது தோழா....
மன்னித்துவிட்டேன்
உன்னை...
அந்த பாவத்தால்
மறுநொடியில்
நானும் மாய்ந்துவிட்டேன்
தோழா!
அடுத்த நாளாவது
வந்து பார்ப்பாயா
சாம்பலாய் கிடக்கும்
என்னையும்
உன் தாயையும்
அந்த ஆற்றங்கரையிலாவது
கரைத்துவிட்டுப் போவாயா!
மயானத்தையும் தண்டித்தவள்,
பாவி
உன்னை தண்டிக்க
அவளுக்கு மனமில்லை!
சுமந்த வயிறு
மெல்லவும் முடியாமல்
தின்னவும் முடியாமல்
முடிகிறது தோழா,
நீ நரித்தேளா!....

எழுதியவர் : மணவாசல் நாகா (3-Jul-12, 10:17 am)
சேர்த்தது : Nagaraj Ganesh
பார்வை : 266

மேலே