[276 ] கட்டுரை (9 ) கலைமதி ஆனந்தின் சில கவித்துவ வரிகள்

இன்று பார்க்கப் போவது ஒரு புதுக்கவிதைப் படைப்பு. இதில் கவிஞரின் சொல்லும் திறன் ஒரு வித்தியாசமான முறையில் வெளிப்படுவதைக் காணப் போகிறீர்கள்:

கவிஞர்: கலைமதி ஆனந்த்.
கவிதை : அறிந்தால் சொல்
அவரது கவிதைப் புத்தகம்: ஜன்னலோரச் சிறகுகள்

மழையில் பலமுறை
உடல்நனைந்தேன்!
உயிர் நனைந்தேன்
ஒரு துளியில்..

புத்தகக்குவியலில்
விழிபதித்தேன்!
மனம்விழித்தேன்
ஒரு புத்தகத்தில்..

எரிமலை வெப்பத்தில்
குளிர்காய்ந்தேன்!
சிந்தை உறைந்தேன்
ஓர் அக்கினிக் குஞ்சில் ..

காதல் கொண்டேன்
பல துறைகளில்!
கவிதை கொண்டேன்
ஒரு காதலில்..

நதிகள் பல
கடந்தேன்!
குளித்தேன்
ஒருநதியில்..

உயிர்களிடத்து
அன்பு கொண்டேன்!
உறவு கண்டேன்
ஓர் உயிரிடத்தில்..

வினா நெரிசலுக்குள்
விடை தேடினேன்!
வினா தொலைத்தேன்
ஒரு விடைக்குள்..

காணும் பொருளிலெல்லாம்
எனைத் தேடினேன்!
நான் தொலைந்தேன்
ஒரு தேடலில்..

ஏ!
இயற்கைச் சாளரமே!
அறிந்தால் சொல்
பிறப்புச் சூட்சுமம்..

கவிதை முழுதுமே வெவ்வேறு தேடல்கல்தாம்;
அவற்றுள் கவிஞன் தன்னைத் தொலைப்பதுதான்..
மீண்டும் வருவேன் மற்றுமொரு கவிதையுடன்..
நன்றி

எசேக்கியல்

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (3-Jul-12, 8:31 pm)
பார்வை : 258

மேலே