உண்மையாய்...நன்றி!
அன்புள்ள எழுத்து நிர்வாகத்திற்கும்...நிலா சூரியனுக்கும்...கவிதை திருவிழா தேர்வுக் குழுவினருக்கும்...
ரமேஷ் ஆலம்-ன் நெகிழ்ச்சியான வணக்கங்கள்.
கவிதைத் திருவிழாத் தேர்வுக்குழுவால்...முதல்
பரிசுக்கு உரியவனாய் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதில்....மட்டற்ற மகிழ்ச்சி. பரிசுப் பணத்தையும்
நான் பெற்றுக் கொண்டு விட்டேன்.
கவிதை எனக்கு ஒன்றும் கை வந்த கலை இல்லை.
ஆனால்-எதை உணர்கிறேனோ...அதை அழகான ...
மனத்திற்கு உண்மையான வார்த்தைகளால்
சொல்ல முயற்சிக்கிறேன். என் கவிதைக்கான
அளவுகோல் இவ்வளவுதான்.
சிறிய வயதில்...எழுதத் துவங்கியதை...தொலைக்காமல் சேர்த்து வைத்து...
இப்போதுள்ள அனுபவத்திற்கு ஏற்றாற் போல்
கொஞ்சம் மாற்றி வெளியிடுகிறேன். அவ்வளவுதான் எனது கவிதைகள்.
ஆனால்..இந்த அளவிற்கான ஒரு உயர்வு...ஒரு
தளத்தால்...ஒரு சாதாரண கவிதை எழுதுபவனுக்குக் கிடைக்கும் என்பது...
வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான, நெகிழ்வான... இன்னும் சமூகப் பொறுப்புடன் எழுதத் தூண்டும்...ஒரு நிகழ்வு.
இதை எனக்குள் சாத்தியமாக்க இந்தப் பரிசு உதவும்...என மனமார நம்புகிறேன்.
இந்த நம்பிக்கையை எனக்குள் விதைத்த..
நிலாசூரியன், எழுத்துத் தளம்., கவிதைத் திருவிழா
தேர்வுக் குழுவினருக்கும்...
என் எழுத்தை எப்போதும்..ஒரு தந்தையைப் போல்
உச்சி மோர்ந்து பாராட்டும்...அருண்குமார்., புதுவை காயத்ரி., பொள்ளாச்சி அபி ., த.சிவபாலன்., ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா.,
ரேவதி.,திரு.எசேக்கியல் சார்., மற்றும் எல்லா எழுத்துத் தள நண்பர்களுக்கும்...இந்த நேரத்தில்
எனது மனமார்ந்த நன்றிகளும்., பேரன்பும்.
அன்புடன் ரமேஷ்.