பூக்கின்ற பூவைப்போல
சொல்புதிது..
சுகம் புதிது,
சுவைக்கின்ற மனம் புதிது!
நெல்புதிது
நிலம் புதிது.
நினைக்கின்ற கணம் புதிது!
வில் புதிது,
விசை புதிது,
விதைக்கின்ற வீரம் புதிது!
கல்புதிது,
கலை புதிது,
காணவைக்கும் நிலை புதிது!
எல்லாமே புதிதாக
எண்ணுகின்ற குணமிருந்தால்
விடிகின்ற விடியல் எல்லாம்
வெற்றியின் பக்கமிருந்தே சொல்லும்..
மனிதா..!
நீயும் புதிது..
நீளுகின்ற நாளும் புதிது..
நீ..வடித்து வைக்கும் வாழ்க்கை புதிது..
பூக்கின்ற பூவைப்போல
பொழுதெல்லாம் புதிதாய் பூக்கும் என்றே!