!!! கவிதை திருவிழா சிறு விளக்கம் !!!
தோழமை உள்ளங்களுக்கு....
தோழமை உள்ளங்களே கவிதை திருவிழாவில் கலந்துகொண்டு சமூக அவலங்களை எடுத்துகூறினீர்கள், உழவனையும், புரட்சியாளனையும் சிறப்பித்தீர்கள், உங்களின் பொதுநல சிந்தனைக்கு நான் தலைவணங்குகிறேன் தோழமைகளே...
தோழமைகளே....
இந்த கவிதை திருவிழா எப்படி நடந்தது என்றும், இந்த கவிதை திருவிழாவிற்கான கவிதை எதன் அடிப்படையில் எப்படி பரிசுக்கு தேர்வு செய்யபட்டது என்றும், உங்கள் மனதில் பலருக்கு கேள்வி எழுந்திருக்கலாம், அப்படி உங்கள் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக இந்த கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
தோழமைகளே...
உலகிற்கே சோறுபோடும் உழவனையும், நான் பெரிதும் நேசிக்கும் சோஷலிச புரட்சியாளர்களில் சே குவேராவும் ஒருவர் என்பதாலும், சே குவேராவின் பிறந்த தினம் இந்த மாதம் வருகிறது அதோடு உழவர்களின் நல்லேறு திருவிழாவும் நடக்கிறது என்பதால் இவர்களை சிறப்பிக்கும் என்னம் என் மனதிற்குள் உருவானது, இவர்களை எப்படி சிறப்பிக்கலாம் என்று யோசித்தேன், எழுத்து. காம் தோழமைகளோடு சிறப்பித்தால் சிறப்பாக இருக்குமென்று முடிவு செய்தேன், அந்த முடிவின் முகம்தான் இந்த கவிதை திருவிழா.
உழவனையும் புரட்சியாளனையும் கவிதைகளால் சிறப்பிக்குமாறு எழுத்து தோழமை உள்ளங்களை கேட்டுகொண்டதோடு, சிறப்பிக்கும் சிறப்பு கவிதைக்கு அன்பு காணிக்கையும் அளிக்க முடிவு செய்தேன், இதற்கு சிறப்பு கவிதையை தேர்வு செய்யும் பணிகள் அனுபவம் நிறைந்த நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டால்தான் சிறப்பாகவும் சரியாகவும் இருக்குமென்று முடிவு செய்து, நடுவர்களை தொடர்பு கொண்டேன். நல்ல முயற்சி மட்டுமல்ல நல்ல சிந்தனையும்கூட ஆதலால் நீங்கள் தாராளமாக கவிதை திருவிழாவை நடத்துங்கள் நாங்கள் உடன் இருந்து செயல்படுகிறோம் என்று நடுவர்கள் என்னை உற்சாகபடுத்தி ஆதரவு அளித்தார்கள், இந்த ஆதரவு எனக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் நூறுமடங்கு தந்தது, உடனே எழுத்து. காமிற்கு ஒரு கடிதம் எழுதி எனது விருப்பத்தை தெருவித்து அனுமதி வேண்டினேன், எழுத்து குழுமமும் முழு அனுமதியையும் ஆதரவையும் அளித்தார்கள்.
முதன்மை நடுவர்களான ஐந்து பேரிடமிருந்து ஐந்து தலைப்புகளை பெற்று, அந்த ஐந்து தலைப்புகளில் கவிதை எழுதுமாறும், எழுதப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைக்கு அன்புகாணிக்கையும், மேலும் சிறந்த இரண்டு கவிதைகளுக்கு சிறப்பு அன்பு காணிக்கையும் வழங்கப்படும் என்றும் மறுநாளே நான் எழுத்தில் அறிக்கை வெளியிட்டேன், தோழமைகள் அனைவரும் ஆதரவு அளித்து என்னை உற்ச்சாக படுத்தினார்கள் என்பது மிக மகத்தானது.
முதன்மை நடுவர்களான ஐந்து பேர்களையும் , (Third Amber) மேலும் சிறப்பு நடுவர்களாக மூவரையும் முதன்மை மற்றும் சிறப்பு நடுவராக ஒருவரையும் தேர்வு செய்தேன், அதோடு இல்லாமல் பதிவு செய்யப்படும் கவிதைகளை மேற்பார்வையிட்டு எந்த எந்த தலைப்புகளில் கவிதைகள் பதிவு செய்யப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் அந்த அந்த தலைப்பின்கீழ் தொகுத்து தொகுப்புகளாக வழங்க இருவரை தேர்வு செய்தேன், இவைகள்தான் இந்த கவிதை திருவிழாவின் உந்து சக்திகள்.
மேலும் கவிதை திருவிழா குழுவை உருவாக்கி அறிக்கை வெளியிட்ட பிறகும்கூட பதினைந்து நாட்கள் முதன்மை நடுவர்கள் யார் யார் என்பது நடுவர்களுக்கே தெரியாமல் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருந்தது, நடுவர்கள் தங்கள் தலைப்புகளில் பதிவாகும் கவிதைகளை தங்கள் மேர்பார்வையினில் எடுத்துகொண்டு கவனித்து வந்துகொண்டு இருந்தார்கள், நடுவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து கொண்டால் அவர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு பேருதவியாக இருக்குமென்று என்னி முதன்மை நடுவர்கள் யார் யார் என்பதை முதன்மை நடுவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன், பிறகுதான் நடுவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்தலில் ஈடுபட்டார்கள்,
அதோ போல் சிறப்பு நடுவர்களான மூவரும் பதிவாகும் மொத்த கவிதைகளுயும் தங்கள் பார்வைக்கு எடுத்துகொண்டு கடைசிவரை சிறப்பாக செயல்பட்டு, முதன்மை நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட இறுதி சுற்றுக்கு தகுதியான கவிதைகளுக்கு தங்களது வாக்குகளை சிறந்த கவிதைக்கு அளித்து இந்த கவிதை திருவிழாவிற்கு அஸ்திவாரமாக செயல்பட்டார்கள் என்பது மிக முக்கியமானதாகும். மேலும் முதன்மை நடுவர்கள் யார் யார் அவர்களின் தலைப்புக்கள் என்ன என்ன என்பது சிறப்பு நடுவர்கள் மூவருக்கும் கடைசிவரை தெரியாது, அதேபோல் நான் சிறப்பு நடுவராக மூவரை நியாமித்து இருக்கும் தகவல் முதன்மை நடுவர்களுக்கு கடைசிவரை தெரியாது, இறுதி நன்றிமடல் வெளியானபிறகுதான் கவிதை திருவிழா குழு உறுப்பினர்கள் யார் யார் என்பது கவிதை திருவிழா குழுவே முழுதாக அறிந்தது என்பதுதான் உண்மை.
தேர்வு முறை:.
பொதுவாக கவிதை திருவிழாவின் முதன்மை நடுவர்கள் தங்கள் தலைப்புகளில் பதிவாகும் கவிதைகளை தங்கள் மேற்பார்வையில் எடுத்துகொண்டு அதிலிருந்து சிறந்த இரண்டு கவிதைகளை தேர்வு செய்து எனக்கு அனுப்புமாறு கேட்டுகொண்டேன், அதே போல் முதன்மை நடுவர்கள் தங்கள் தலைப்புகளில் பதிவான கவிதைகளில் இருந்து சிறந்த இரண்டு கவிதைகளை, கவிதையின் அமைப்பையும், சொல்லாக்கத்தையும், அதுகூறும் பொருள் விதத்தையும் அடிப்படை கூறுகளாக கொண்டு சிறந்த கவிதையை தேர்வு செய்து ஒவ்வொருவரும் அவரவர் தலைப்புகளில் இருந்து இரண்டு கவிதைகளை தேர்வு செய்து எனக்கு அனுப்பினாங்கள். தேர்வின் முதல் சுற்றில் பத்து கவிதைகள் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பத்து கவிதைகளை இரண்டு இரண்டாக ஐந்து முதன்மை நடுவர்களுக்கும் மாற்றி மாற்றி அனுப்பினேன், அதாவது ஒரு நடுவர் தேர்வு செய்த கவிதை இரண்டினை மற்றொரு நடுவருக்கும் மற்றொரு நடுவர் தேர்வு செய்த இரண்டு கவிதையை வேறொரு நடுவருக்கும் மாற்றி மாற்றி அனுப்பி இரண்டில் ஒன்றை தேர்வு செய்து அனுப்பும்படி கேட்டுகொண்டேன், அதே போல் முதன்மை நடுவர்கள் இரண்டில் ஒன்றை தேர்வு செய்து தந்தார்கள், மொத்தம் ஐந்து கவிதைகள் இரண்டாம் சுற்றில் தேர்வானது,
இப்பொழுது முதன்மை நடுவர்கள் ஐவரால் தேர்வு செய்யப்பட்ட ஐந்து கவிதைகளையும் ஏழு நடுவர்களுக்கும் அனுப்பி அதிலிருந்து சிறந்த கவிதை ஒன்றை தேர்வு செய்து தரும்படி கேட்டுகொண்டேன், அதாவது முதன்மை நடுவர்கள் ஐவருக்கும், சிறப்பு நறுவர்கள் இருவருக்கும் அந்த ஐந்து கவிதைகளையும் அனுப்பி தேர்வு செய்யும்படி கேட்டுகொண்டேன், அதன் அடிப்படையில் அதிகம் தேர்வான கவிதைக்கு முதல் பரிசும், அதற்கு அடுத்தபடியாக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளுக்கு சிறப்பு பரிசு மற்றும் ஊக்க உந்துதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதுதான் கவிதை திருவிழா குழுவின் சுருக்கமான விளக்கம், பலரது சந்தேகங்களுக்கு விடைகூறும் விதமாகவும், மேலும் யாராவது இதை போல் ஏதாவது நிகழ்வு நடத்த முன் வந்தால் எனது இந்த கருத்து சிறிதாவது பயன்படும் என்ற நம்பிக்கையிலும்தான் இதை இங்கே பதிவு செய்து இருக்கிறேன்.
நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றிகள் தோழமைகளே...
தொடர்ந்து இணைந்திருப்போம்....
தோழமையுடன்
நிலாசூரியன்.