உவகையுடன் சொல்லிடுவார்,

கவிதைகளை சொல்வதற்கும்,
கடமைகளை செய்வதற்கும்,
கருத்து உண்டு!
புவிதனையும் வென்றிடலாம்,
புதுப்பாதை போட்டிடலாம்.
புத்தி கொண்டு!
நவில்கின்ற வார்த்தைகளில்
நயம்கொண்ட சொல்லெடுத்து
நட்பு கண்டு,
தவிக்கின்ற நேரத்தில் ,
தடம்தேடும் கோபத்தில்,
தடுத்து நின்று,
கவிழ்கின்ற முகில்போல,
கருணைதனை செய்துநின்றால்...
கடவுள் என்று,
உவகையுடன் சொல்லிடுவார்,
உனைபோற்றி மகிழ்ந்திடுவார்,
உரிமை கொண்டு!